Jump to content

User:Shriheeran/7

Mayelana Wikipedia

ஓபன் சீசன் என்பது 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இயங்குபட நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இது ஓர் அமெரிக்கத் திரைப்படம் ஆகும். இது ஸ்டீவ் பென்சிச் மற்றும் ரொன் ஜெ. ஃபிரெயிட்மென் என்போரால் எழுதப்பட்டது. இத்திரைப்படத்தை ஜில் கல்டன் ம ற்றும் ரோஜர் அட்டேர்ஸ் என்போர் இயக்கினர். உதவி இயக்குநராக அந்த்ஜோ ஸ்டச்சி செயற்பட்டார். இத்திரைப்படத்தின் பிரதான கதாப்பாத்திரம் பூக் எனும் கரடியாகும். பூக் எனும் இவ்வீட்டுகரடியும் எலியட் எனும் ஒரு கொம்பு முறிந்த மானும் ஏனைய பல காட்டுவிலங்குகளும் சேர்ந்து அவற்றை வேட்டையாட வரும் வேட்டைக்காரர்களை துரத்துதலே இத்திரைப்படத்தின் கதைக்கருவாகும். சொனி பிக்சர்ஸ் அனிமேசன் தயாரித்த முதற்த் திரையரங்குத் திரைப்படம் இதுவேயாகும். கொலம்பியா பிக்சர்ஸ் இனால் செப்டம்பர் 29,2006 ஆம் திகதி இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. முப்ப்பரிணாமத் திரையிலும் இத்திரைப்ப்டம் வெளிடப்பட்டது. இத்திரைப்படத்தின் தொடர்ச்சிகள் 2009 ஆம் ஆண்டில் ஓபன் சீசன் 2 எனவும் 2011இல் ஓபன் சீசன் 3 எனவும் வெளிவந்தது. ஓபன் சீசன் ஸ்கியார்ட் சில்லி எனும் இதன் மற்றுமொரு தொடர்ச்சி 2016 ஆம் ஆண்டு வெளிவரவுள்ளது.

மாட்டின் லோரன்சு, அஸ்டன் குஷ்டர், கரி சினிசி, டெப்ரா மெசிங், பில்லி கொன்னொலி, ஜோன் ஃபவ்ரு, ஜோர்ஜியா ஏஞ்சல், ஜேன் கிரக்கோவிஸ்கி, கோடன் டுடோசிஸ், பட்ரிக் வார்பட்டன் ஆகியோர் இத்திரைப்படத்தில் வரும் கதாப்பாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர்.

காணொளி விளையாட்டு

[hlela | Hlela umthombo]

இத்திரைப்படத்தினை அடிப்படையாகக் கொண்டு ஓர் காணொளி விளையாட்டு வடிவமைக்கப்பட்டது. அது செப்டம்பர் 18, 2006 அன்று வெளியிடப்பட்டது.